web log free
July 01, 2026

பிஸ்கட் கொடுத்து ஏமாற்றி சிறுமி பாலியல் துஷ்பிரயோகம், தந்தைக்கு ஒன்பது வருட கடூழியச் சிறை

பிஸ்கட் கொடுத்து ஏமாற்றி முன்பள்ளி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒரு பிள்ளையின் தந்தைக்கு ஒன்பது வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க தீர்ப்பளித்துள்ளார்.

12 வருடங்களுக்கு முன்னர் ஐந்து வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, 200,000 ரூபா நட்டஈடு மற்றும் இழப்பீடு கொடுக்கத் தவறின் ஒரு வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd