வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 4.6% அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், பிரிதானியாவின் ஸ்டேலின் பவுன், இந்திய ரூபாய், ஜப்பான் யென் ஆகியவற்றுக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மத்திய வங்கியின் நாணய மாற்று பெறுமதியின்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் விற்பனை விலை 176.45 ரூபாயாகும்.
அமெரிக்க டொலர் ஒன்றின் வாங்கும் விலை 172.61 ரூபாய் ஆகும்.