web log free
October 01, 2023

டுபாயில் இருந்து இதுவரை 21 பேர் நாடுகடத்தல்

மாகந்துரே மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுள் மேலும் 6 பேர்
நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை 4 .45 மணியளவில் நாட்டை
வந்தடைந்த அவர்கள், குற்ற புலனாய்வு பிரிவினர் பொறுபேற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடு கடத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுள் மாகந்துரே மதூஷூடைய உறவினர்
ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நாடு கடத்தப்பட்டவர்களுடன் சேர்த்து, இதுவரை 21 பேர் டுபாயில் இருந்து நாடு
கடத்தப்பட்டுள்ளனர்.