தற்போதைய எரிபொருள் நெருக்கடி இன்னும் ஒரு வருடத்திற்கு தொடரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அந்த நேரத்தில், எரிபொருள் வரிசை எப்போதாவது குறைக்கப்படும், ஆனால் மீண்டும் வரிசை நீளும் என்றார்.
தற்போது இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும், ஆனால் அது தவிர்க்க முடியாமல் 300 மில்லியனாக பாதியாகக் குறைக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அங்கு சில சிரமங்கள் ஏற்படும் எனவும், இராணுவம் தலையிட்டு எரிபொருள் விநியோகத்திற்கான டோக்கன் முறையை நாளை முதல் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் கடன் கடிதம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் ரஷ்ய கப்பல் நிறுவனம் அதனை நிராகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்