web log free
August 23, 2025

நாடு முழுமையாக முடக்கம்

அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கப்படாத போதிலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக அடுத்த வாரம் நாடு பூட்டப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்தியாவசிய சேவைகளை கூட பேண முடியாத அளவிற்கு எரிபொருள் நெருக்கடி நாட்டை பாதித்துள்ள நிலையில், எரிபொருளை இறக்குமதி செய்யும் வரை இந்த அபாய நிலை தொடரும் எனவும் அறியமுடிகின்றது.

பொதுப் போக்குவரத்துச் சேவைப் பேருந்துகள் மட்டுமன்றி, சுகாதார சேவைகள், கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளையும் பராமரிக்க முடியாத அளவுக்கு எரிபொருள் நெருக்கடி மோசமடைந்துள்ளது.

மேலும், மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் மருத்துவ விநியோக சேவைகளுக்கு போதிய எரிபொருளை வழங்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் கடந்த வாரம் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளை வழங்கிய போதிலும், கடந்த வாரமும் பல அத்தியாவசிய சேவைகள் தடைப்பட்டன.

இந்நிலையில், அடுத்த வாரத்திற்கு நாட்டு விவகாரங்களை வழமையாகப் பேணுவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அடுத்த வாரம் டீசல் கப்பல் ஒன்றும், அடுத்த வாரம் 22ம் திகதி பெற்றோல் கப்பல் ஒன்றும் இலங்கைக்கு வரும் என அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd