web log free
June 06, 2023

பிரதேச செயலாளர் கத்திக் குத்துக்கு உள்ளாகிப் பலி

பொலன்னறுவை, லங்காபுர பிரதேச செயலகத்தின் பிரதம நிருவாக அதிகாரி கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த அதிகாரி 42 வயதுடைய பெண் எனவும், இன்று காலை கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்த அதிகாரி உயிரிழந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.