web log free
June 05, 2023

மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை - நாமல் எம்.பி அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலையில் எவ்விதமான பாதிப்புகளும் இல்லை என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர், சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்கள் உட்பட முக்கிய செய்தி நிறுவனங்களும் செய்திகளை வெளியிட்டுள்ளன. அந்த செய்திகளில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை. செய்திகளை உறுதிப்படுத்திக்கொண்டு வெளியிடவேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.

நாட்டின் தற்போதைய நிலைமையில், போலியான செய்திகளை உருவாக்குதல், மக்களிடத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை உருவாக்குதல் அவ்வளவுக்கு நல்லதல்ல. நாட்டின் மக்களை திசைதிருப்புவதற்கு கோபத்தை ஏற்படுத்துவதற்கு இன்றேல் தூண்டும் வகையில் செய்திகளை பரப்புவதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.