web log free
June 05, 2023

லிட்ரோ கேஸ் ஏற்றிய கப்பல் நாட்டுக்கு வருமா? வராதா?

06 மற்றும் 08 க்கு இடையில் இலங்கைக்கு வரும் என முன்னர் கூறப்பட்ட எரிவாயு கப்பல் மேலும் தாமதமாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பல் 3,724 மெட்ரிக் தொன் எரிவாயுவை இலங்கைக்கு கொண்டு வரவுள்ளதாகவும், காலநிலை மாற்றத்தினால் தாமதமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் எதிர்வரும் 9ஆம் திகதி இலங்கைக்கு வரும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.