web log free
June 05, 2023

ஜனாதிபதி செயலகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு திட்டம்

எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு போராட்டக்காரர்கள் தயாராகி வருவதாக சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகின்றது.

இது போராட்டக்காரர்களின் உண்மையான காணொளியா அல்லது சில குழுவினரால் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.எவ்வாறாயினும், எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்புக்கு வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எவ்வாறு ஜனாதிபதி மாளிகையை தாக்கி அதனை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர் என்பது குறித்த ஒலிநாடாவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.