web log free
June 05, 2023

ஒரு பிரபலமான கார் டீலர்ஷிப் நிறுவனம் சைக்கிள்களை விற்கத் தொடங்குகிறது

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக அளுத்கமவில் உள்ள கார் விற்பனை நிலையம் ஒன்று துவிச்சக்கர வண்டி விற்பனையை ஆரம்பித்துள்ளது.
ஐம்பதாயிரம் முதல் எண்பதாயிரம் ரூபாய் வரையிலான மிதிவண்டிகளின் விலை குறித்து விசாரிக்க இளைஞர்களும் வருவதைக் காண முடிந்தது.
மிகவும் பெறுமதியான வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த போதிலும், மாதக்கணக்கில் அவற்றின் விலையைக் கேட்கவோ அல்லது வாங்கவோ வாடிக்கையாளர் வரவில்லை என ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.