web log free
September 30, 2023

பிரதமர் ரணிலிடம் மன்னிப்பு கோராவிட்டால் தம்மிக்கவின் அமைச்சுப் பதவி பறிபோகும்!

பிரதமர் பதவி விலக வேண்டும் என பகிரங்கமாக தெரிவித்த முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேராவை  மன்னிப்பு கேட்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக வாரப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகைக்கு அழைக்கப்பட்ட அமைச்சரை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டியதாகவும், பிரதமரிடம் மன்னிப்பு கேட்காவிட்டால், திங்கட்கிழமைக்குள் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அமைச்சர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இதுவரை தொலைபேசி கூட பேசவில்லை அல்லது மன்னிப்பு கேட்கவில்லை என்று அதே பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எந்த திட்டமும் இல்லை எனவும் அவர் உடனடியாக நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் தம்மிக்க பெரேரா ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றினார்.

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு பற்றி எதுவுமே தெரியாத தம்மிக்க பற்றி அரசியல் களத்தில் பேசப்பட்டு வருகின்றது.

மேலும் கசினோ வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான வரிவிதிப்புக்கு பிரதமர் கொண்டு வந்த அமைச்சரவை பத்திரமே இந்த மோதலின் ஆரம்பம் என ஏனைய விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.