web log free
June 05, 2023

பந்துல குணவர்தன இராஜினாமா ,மொட்டு கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவிப்பு!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பதவிகளில் இருந்தும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்தும் தான் விலக தீர்மானித்துள்ளதாக கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புதிய சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது பெரும்பான்மையான இலங்கை மக்களினதும் மதத் தலைவர்களினதும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க தனது பங்களிப்பை செலுத்த உள்ளதாகவும் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.