web log free
March 13, 2026

பாராளுமன்றம் அதிகாரப்பூர்வமாக ஜனாதிபதி பதவியின் வெற்றிடத்தை அறிவித்தது

இலங்கை ஜனாதிபதியின் அலுவலகம் வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் உத்தியோகபூர்வமாக சபைக்கு அறிவித்தார்.

இதன்படி, கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதத்தை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க சபையில் வாசித்துவிட்டு ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் இருப்பதாக தெரிவித்தார்.

ஜூலை 19 ஆம் திகதி காலை 10 மணிக்கு சபை கூடியதும் ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்களை தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என செயலாளர் நாயகம் சபைக்கு அறிவித்தார்.

ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனுக்களை சமர்ப்பித்தால், ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஜூலை 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அரசியலமைப்பின் பிரகாரம் கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமாவை அறிவிப்பதற்காக பாராளுமன்றத்தின் விசேட அமர்வு இன்று கூடியது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd