web log free
June 05, 2023

தமிழ் கட்சிகளுக்கு சிவி விக்கி எம்பி விடுத்துள்ள அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போது தமிழ்க் கட்சிகள் நடுநிலை வகிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவி விக்கேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட 11 கட்சிகள் இவ்வாறு நடுநிலை வகிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.