web log free
January 21, 2026

நாளைய நாள் ரணிலை வீட்டுக்கு அனுப்பும் போராட்ட நாள்

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலக வற்புறுத்தி நாளை (19ம் திகதி) தீவிர நடவடிக்கை எடுப்போம் எனவும் நாளை போராட்ட நாள் எனவும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.

இன்று முதல் மக்கள் அண்மித்த நகரங்களில் போராட்டங்களை நடத்த வருமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனத் தெரிவித்த வசந்த முதலிகே, முழு நாட்டையும் போராட்டக்களமாக மாற்றி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அகற்றியதாகவும் குறிப்பிட்டார்.

ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்கு தொழிற்சங்கங்களும் வெகுஜன அமைப்புகளும் பாரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் போராட்டத்தை வெற்றியுடன் முடிக்க முடியும் எனவும் வசந்த முதலிகே மேலும் தெரிவித்தார்.

தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் வசந்த முதலிகே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd