முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்யுமாறு கோரி சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் (ITJP) சட்டத்தரணிகள் குழுவொன்று சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த போது ஜெனிவா உடன்படிக்கையை மீறி போர்க்குற்றங்களை இழைத்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
2009 விடுதலைப் புலிகளின் மோதலின் போது ஜெனிவா உடன்படிக்கைகள், சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச குற்றவியல் சட்டங்கள் மீறப்பட்டதாக 63 பக்கங்கள் கொண்ட புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.