web log free
May 23, 2026

திங்கட்கிழமை வரை விசேட பஸ் சேவை

தமிழ் - சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபையினால் முன்னெடுக்கப்படும் போக்குவரத்து சேவையின் இரண்டாம் கட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்கு இலகுவாக இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திர்வரும் திங்கட்கிழமை வரை விசேட பஸ் சேவைகள் இடம்பெற உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதிவரை மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட சேவையினால், இலங்கை போக்குவரத்து சபைக்கு 400 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமான கிட்டியதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd