தேசிய எரிபொருள் அட்டை Q.R. முறையில் நேற்று (31) இரவு வரை 50 இலட்சம் வாகனங்கள் எரிபொருளைப் பெற பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 1,140 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை விநியோகிக்க உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அந்த 1,140 எரிவாயு நிலையங்களில், 964 சிபெட்கோ நிலையங்கள் என்றும் ஐ.ஓ.சி. 176 நிரப்பு நிலையங்கள் உள்ளதாகவும், அந்த நிரப்பு நிலையங்களுக்கு நேற்று 10 மில்லியன் லீற்றர் எரிபொருள் வழங்கப்பட்டதாகவும் எரிசக்தி அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
பதிவு செய்யப்பட்ட 50 லட்சம் வாகனங்களில் 2,891,260 மோட்டார் சைக்கிள்கள், 876,158 முச்சக்கர வண்டிகள் மற்றும் 651,314 கார்கள் உள்ளடங்குவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.