ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு அதிக தகுதிகள் தன்னிடம் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு தனது பெயர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் முன்மொழியப்பட்டதாகவும், அதற்கு தான் மிகவும் தகுதியானவர் என்றும் அவர் கூறினார்.
2015ஆம் ஆண்டு நல்லாட்சியை கொண்டு வரவே ஜனாதிபதி வேட்பாளராக தம்மை முதன்முதலில் அழைத்ததாகவும், கட்சியை விட்டு விலக விரும்பாத காரணத்தினால் தான் அதற்கு இணங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.