web log free
September 26, 2023

முக்கிய விக்கெட்டுக்களை இழக்கும் சஜித்!

அனைத்துக் கட்சி ஆட்சி அமைப்பது தொடர்பாக சஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் கருத்து வேறுபாடுகள் வலுப்பெற்றுள்ளன.

நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில், கூட்டாக இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அக்கட்சியில் உள்ள பெருந்தொகையானோர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இத்தருணத்தில் அரசாங்கத்துடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும், இல்லையேல் தமது அரசியல் மக்களால் நிராகரிக்கப்படும் எனவும் கட்சியின் முக்கிய பதவிகளை வகிக்கும் சிரேஸ்ட குழுவும் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவதில்லை என கட்சி தீர்மானித்தால் அவர்கள் தனிப்பட்ட மட்டத்தில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.