web log free
September 29, 2023

சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சு பதவி பெற பலரும் தீவிர காய்நகர்த்தல்

அனைத்துக் கட்சி ஆட்சியை உருவாக்கும் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

அனேகமாக அடுத்த சில தினங்களில் அரசாங்கத்தின் அமைச்சரவை பெயரிடப்படும்.

இதேவேளை, அரசாங்கத்தில் பலம் வாய்ந்த அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்து பல்வேறு கட்சிகளின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதிக்கு பல்வேறு வழிகளில் செய்திகளை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவின் பலமானவர்கள் ஊடாக இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாகவும் அறியமுடிகிறது. மேலும் சிலர் ஜனாதிபதியிடம் நேரடியாக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.