web log free
July 02, 2025

மேல் மாகாண சபை இன்று நள்ளிரவுடன் காலாவதி

மேல் மாகாண சபையின் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதுடன், தற்போது வரை 7 மாகாண சபைகளின் அதிகார காலங்கள் நிறைவடைந்துள்ளன.

சப்ரகமுவ, கிழக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களின் அதிகார காலங்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்தன.

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் அதிகார காலங்கள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நிறைவடைந்தன.அத்துடன், தென் மாகாணத்தின் அதிகார காலம், கடந்த 10ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது.

இந்த அனைத்து மாகாணங்களும் தற்போது மாகாண ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் இயங்குவதுடன், ஊவா மாகாண சபையின் அதிகார காலம் மாத்திரமே எஞ்சியுள்ளது. அதன் ஆட்சிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd