web log free
March 31, 2026

அமைச்சர் மகளின் 25 லட்சம் பெறுமதி மோதிரத்தை திருடியவர் கைது

அமைச்சர் ஒருவரின் மகளின் சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கல் பதித்த மோதிரத்தை திருடிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமைச்சரின் மகள், தனது கணவர் மற்றும் சிலருடன் சுற்றுலா சென்றிருந்த வேளையில் அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹோட்டலின் குளியலறையில் தன் மோதிரத்தைக் கழற்றி அறையின் சுவரில் வைத்துள்ளார் அமைச்சர் மகள். 

ஹோட்டலுக்குள் பாம்பு வந்துவிட்டது என்று கூச்சலிட்டு குளியலறையில் இருந்து ஒருவர் ஓடிவந்தார், திரும்பி வந்து பார்த்தபோது மோதிரம் காணாமல் போயிருந்தது.

விடுதியின் கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், அதை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது.

குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொத்தனார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd