web log free
September 29, 2023

கோட்டாபயவுடன் ஜனாதிபதி ரணில் தொலைபேசி உரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் உரையாடி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க இந்த உரையாடல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ச அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து, கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு திரும்புவதற்கு வசதி செய்து தருமாறு கோரியிருந்தார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பதுடன், அவர் நாடு திரும்பும் திகதியும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.