ஆளும் கட்சியில் அதிக அதிகாரம் கொண்ட பிரதான கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக அந்த முன்னணி தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் விகிதாச்சாரத்தின் பிரகாரம் தமது கட்சிக்கு உரிய அமைச்சுப் பதவிகள் நிச்சயம் கிடைக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.பி சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.


