ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த யுவான் வாங் 5 என்ற சீன ஆய்வுக் கப்பல் நேற்று பிற்பகல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.
கடந்த 16 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த இந்த பயணக் கப்பலின் பணி குறித்து இதுவரை எந்த அறிக்கையும் இல்லை.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து கப்பல் புறப்பட்டும் சந்தர்ப்பத்தை ஊடகங்களுக்கு தெரிவிக்குமாறு ஹம்பாந்தோட்டை துறைமுக அதிகாரிகளிடம் ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரிகள் கேட்டபோது, அதற்கான அனுமதியை வழங்க முயற்சிக்கவில்லை.
எனினும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து மதியம் கப்பல் புறப்பட்டது.