இரத்தினபுரி நகரிலுள்ள முன்னணி பாடசாலையின் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
23 ஆம் திகதி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் அதிபரை கைது செய்து இரத்தினபுரி மேலதிக நீதவான் காஞ்சனா கொடித்துவக்கு முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இம்மாதம் 30ஆம் திகதி வரை அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு திகதியில் நடந்ததாகக் கூறப்படும் இந்த துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட மாணவியின் (16) பெற்றோர் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.
அதன்படி, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினர் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.