நெல் அறுவடை இயந்திரங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் போதிய பதில் கிடைக்காவிட்டால் நாளை முதல் அங்கு செல்லவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சில் நடைபெற்ற விவசாயிகள் அமைப்பின் பிரதிநிதிகள் குழுவுடனான கலந்துரையாடலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு உடனடியாக எரிபொருளை வழங்குவதற்கு எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு விவசாய அமைச்சின் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய பிரதிநிதிகள் கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளனர்.