web log free
April 16, 2026

ஜனாதிபதி கண்டனம்

 

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வன்மையாக கண்டித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையில், இந்த சம்பவம் தொடர்பில் தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் இந்த சம்பவம் தொடர்பில் மிகுந்த கவலை அடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த சதித்திட்டம் தொடர்பில் விசாரணை செய்த அனைத்து பாதுகாப்பு பிரிவினருக்கும் அறிவுறுத்தல் வழங்ப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த விசாரணைகளுக்கு மக்கள் உதவி வழங்குமாறும் அனைவரும் நிதானமாக செயற்படுமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதுடன், பொய் பிரச்சாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd