web log free
April 10, 2026

ரயில் சேவைகள் ரத்து

மீள் அறிவித்தல் வரும் வரை தனியார் மற்றும் அரச பேருந்துகளில் பொதிகளை எடுத்துச் செல்வதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை என்பன தெரிவித்துள்ளன.

அதனடிப்படையில் மீண்டும் அறிவிக்கும் வரை பொதிகளை எடுத்து வருவதை தவிர்க்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், பயணிகள் எடுத்துவரும் பைகளை சோதனை செய்த பின்னரே பேருந்துக்குள் ஏற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று இரவு இடம்பெறவிருந்த தபால் ரயில் சேவை மற்றும் ஏனைய ரயில் சேவைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd