web log free
February 05, 2026

நீர், மின் கட்டணம் வீட்டு வாடகை செலுத்தாத அரசியல்வாதிகள்! ஒரு கோடிக்கு மேல் நட்டம்

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்ன, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதில் அமைச்சர்களின் கட்டண நிலுவைத் தொகையை பெற்றுக்கொடுக்க தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

வீட்டு வாடகை, குடிநீர், மின் கட்டணம் போன்றவை செலுத்த வேண்டும் எனவும் மின் கட்டணம் மற்றும் வீட்டு வாடகை செலுத்துவதில் தவறிய  அமைச்சர்கள் தொடர்பில் பாராளுமன்ற குழுக்களின் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கூற்றுப்படி, நீர் கட்டணத்தை செலுத்த தவறிய அமைச்சர்களின் எண்ணிக்கை 60ஐ நெருங்குகிறது.

மேற்படி அமைச்சர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டிய தொகை ஒரு கோடி ரூபாய்க்கு மேல் என் தெரியவந்துள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd