web log free
April 08, 2026

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் உயிரிழப்பு

கொழும்பு, தெமட்டக்கொடை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் மகவில உதான பகுதியில் உள்ள வீட்டுக்குள் இடம்பெற்ற வெடிப்பினை அடுத்து, அப்பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, அங்குள்ள வீடொன்றுக்குள் சோதனையில் ஈடுபட்ட போது, அங்கு இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd