web log free
September 30, 2023

கோட்டாபயவின் அரசியல் குறித்து நாமல் கருத்து

அரசியலில் ஈடுபடுவதா? இல்லையா? என்பதை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே தீர்மானிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கையின் குடிமகன் என்கிற ரீதியில் மீண்டும் நாட்டுக்கு வருவதற்கான, உரிமை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இருக்கிறது.

அதுபோல, அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதை கோட்டாவே தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் என்ன செய்வது என்பதை முதலில் கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானிக்க வேண்டும் எனவும் கூறினார்.