web log free
February 06, 2026

நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதிக்கு 175 தேவை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கு சகலரது ஆதரவையும் ஜனாதிபதி தொடர்ச்சியாக கோரியுள்ளதாகவும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீட்க குறைந்தபட்சம் 175 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு ஜனாதிபதிக்குத் தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அனைத்து அரசியல் கட்சிகளும் தேசிய வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd