முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமர் பதவிக்கு நியமிப்பது தொடர்பிலோ அல்லது வேறு எந்தப் பதவியிலோ எவ்விதமான கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும் அவர் தொடர்ந்தும் அரசியலில் இருப்பாரா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 76வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்ற சமய வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம், கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் தங்குவதற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.