web log free
May 19, 2026

சந்திரிக்கா அம்மையார் வெளிப்படுத்தும் கொலை!

சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் மிகவும் ஜனநாயக கட்சியாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஜனநாயகத்தை கொன்று குவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று (5) தெரிவித்தார்.

அத்துடன், கட்சியின் கொள்கை அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, கட்சியின் கொள்கைகளையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் பாதுகாத்த மக்களுக்காக தொடர்ந்தும் பாடுபடுவேன் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd