web log free
September 30, 2023

ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்த 37 சந்தேகநபர்கள் கைது!

கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்தமைக்காகவும் சட்டவிரோதமாக ஒன்றுகூடியதற்காகவும் அடையாளம் காணப்பட்ட 71 பேரில் இதுவரை முப்பத்தேழு (37) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூலை 09 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் பலவந்தமாக நுழைந்து சேதங்களை ஏற்படுத்திய மற்றும் சொத்துக்களை திருடிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அடையாளம் காணப்பட்ட 71 சந்தேக நபர்களின் புகைப்படங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன, அவர்களில் 37 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஐந்து பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர், மேலும் சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.