web log free
January 25, 2026

தமிழர்களுக்கு எங்குமே இடமில்லை

இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களில் எங்காவது ஒரு தமிழர் பொதுச் செயலாளராக அல்லது பிரதேச செயலாளராக இருக்கின்றாரா என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (06) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் தற்போதுள்ள பிரதம செயலாளரை விட அனுபவமிக்கவர்கள் வட மாகாணத்தில் உள்ள போதிலும் அங்கு ஒரு சிங்களவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்காக இலங்கை - இந்திய ஒப்பத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட மாகாண சபை திட்டத்தில் இன்று அதிகாரங்கள் யாரிடம் இருக்கின்றது என அவர் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd