web log free
July 01, 2026

இராஜாங்க அமைச்சர்கள் நியமனத்தால் நாட்டின் கடன் சுமை பல மடங்கு உயர்வு

இராஜாங்க அமைச்சர்களின் ஊழியர்களுக்கு 111 வாகனங்கள் ஒதுக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மக்கள் வாழக் கூட முடியாத நிலையில் முப்பத்தேழு இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதன் மூலம் நாட்டின் செலவினம் மேலும் அதிகரிக்கும் என்றார்.

ஒரு இராஜாங்க அமைச்சருக்கு 5 பேர் கொண்ட ஊழியர்கள் இருப்பார்கள் என்றும் அவர்களில் மூவருக்கு அரசு மூன்று வாகனங்களை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd