web log free
August 22, 2025

இறக்குமதி செய்யப்படும் அரிசி விலங்குகளுக்கே பொருந்தும், மனித பாவனைக்கு உகந்தது அல்ல

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசி மனிதனின் உணவு பாவனைக்கு தகுதியற்றது என தாம் கருதுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் அரிசி உற்பத்தியில் இந்த நாட்டில் பயன்படுத்தப்படாத இரசாயனங்கள் மற்றும் தரக்குறைவான உரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

எனவே, இறக்குமதி செய்யப்படும் அரிசி மனிதர்களை விட விலங்குகளுக்கு ஏற்றது. எனவே கால்நடை தீவன பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் உரிய வர்த்தமானி அறிவித்தலை நீக்கினால் அந்த அளவு அரிசியை கால்நடை பாவனைக்கு பயன்படுத்த முடியும் என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்நாட்டு மக்களுக்கு தேவையான அரிசியை வழங்குவதற்கு இந்நாட்டு விவசாயிகள் பலமடைந்துள்ளனர் என கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd