web log free
December 05, 2023

சுதந்திரக் கட்சியின் அதிரடி நடவடிக்கை

கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக, அரசாங்கத்தின் பதவிகளை பெற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதற்கமைய, மாவட்டத் தலைவர்கள், தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பதவிகள் மற்றும் மத்திய செயற்குழுவின் உறுப்பினர் பதவிகளில் இருந்து சம்பந்தப்பட்டவர்களை நீக்குவதற்கு கட்சியின் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த தீர்மானத்தை ஊடாக உரியவர்களுக்கு அறிவிக்கப்பட்ட கடிதத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.