web log free
November 29, 2024

மின் கட்டண அதிகரிப்பை கண்டித்து எதிர்கட்சி இன்று எடுக்கவுள்ள நடவடிக்கை

நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தினால்  அசௌகரியமானதொரு சூழ்நிலையை தற்போதைய சமூகம் எதிர்கொண்டுள்ளதாகவும், மின்கட்டண அதிகரிப்பை நிராகரிப்பதாகவும், பல வருடங்களாக நடந்த ஊழல் மோசடிகளின் விளைவுகளை மக்களும் மதத் தலைவர்களும் கூட இப்போது அனுபவிக்க வேண்டியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

எனவே, இது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் பலமாக குரல் எழுப்புவதாகவும், ஆட்சியாளர்கள் நாட்டில் ஊழல் மோசடிகளை செய்யும் போது, ​​அந்த ஊழல் மோசடிகளை விமர்சிக்கும் உரிமை மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மதத் தலைவர்களின் உரிமையாகும் எனவும், அவ்வாறான சந்தர்ப்பத்தில், அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருப்பவர்கள், மதத் தலைவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அவமானப்படுத்தினால், அதை வன்மையாக கண்டித்து நிராகரிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

எதேச்சாதிகாரமாக மேற்கொள்ளப்பட்ட மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக மகாசங்கத்தினர் உள்ளிட்ட சமயத் தலைவர்கள் குழு ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்தனர்.

இந்த அரசாங்கம் சமூக பாதுகாப்பு திட்டமொன்றையேனும் கூட முறையாக செயல்படுத்துவதாக இல்லை எனவும், மத வழிபாட்டுத் தலங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் சமூகப் பணிகளை பாராட்டுவதாகவும், ஒரு கொள்கையாக,எதிர்க்கட்சியாகவும், ஐக்கிய மக்கள் சக்தியாகவும், மதத் தலைவர்களையும், மதங்களையும் அவமதிக்கும் எதையும் ஒருபோதும் மேற்கொள்ளாது எனவும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd