web log free
April 06, 2026

கொச்சிக்கடை பகுதியில் மற்றுமொரு வெடிப்பு

கொச்சிக்கடை தேவாலயத்துக்கு அண்மித்த பகுதியில் மற்றுமொரு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வான் ஒன்றில் காணப்பட்ட வெடிபொருளை செயலிழக்க விசேட அதிரடிப்படையினரால் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வதந்திகளை நம்பவேண்டாம் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Last modified on Wednesday, 11 September 2019 01:52
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd