முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மனைவி அயோமா ராஜபக்ஷவுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து 10 இலட்சம் ரூபா கப்பம் கோரிய நபரை நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த நபர் கொலன்னாவ சாலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த கணேசன் யோகன் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மூன்று நாட்களாக தொலைபேசி ஊடாக பணம் கேட்டு மிரட்டியதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இந்த சந்தேகநபர் அயோமா ராஜபக்ஷவுக்கு 30 முறை அழைப்பு விடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அழைப்பு தவறுதலாக விடுக்கப்பட்டதாக கருதிய முன்னாள் கோட்டாபய ராஜபக்சவின் செயலாளர் ஒருவர் தகவல் கிடைத்ததும், தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்த நபருக்கு அழைப்பு எடுத்து உண்மைகளை விளக்கினார்.
இதுபற்றி அறிந்தே தான் இப்படி தொலைபேசி அழைப்பை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.