web log free
May 10, 2025

பாடகர் அமல் பெரேரா உட்பட ஆறு பேரிடம் விசாரணை

பாதாள உலக குழு தலைவர் என்று அறியப்படும் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட ஆறு பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த ஆறு பேரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

UL 226 என்ற விமானத்தின் ஊடாக இன்று (23) அதிகாலை 5 மணியளவில் அவர்கள் நாட்டை வந்தடைந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் குறித்த ஆறு பேரிடமும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd