web log free
April 05, 2026

இம்மாத இறுதிக்குள் ரணிலையும் அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்ப பாரிய போராட்டம்

இந்த ஒக்டோபர் மாத இறுதிக்குள் மீண்டும் அரசியல் சுனாமி வரும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிடுகின்றார்.

மக்கள் சுனாமி ஊழல் அரசியல்வாதிகளை வேரறுக்கும் என்றும் அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்ட கதியே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடுத்தர மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாலும், அடுத்த கட்டத்தை ஏழை மக்கள் முன்னின்று நடத்துவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd