web log free
July 02, 2025

கோடி கணக்கில் பண மோசடி செய்த திலினிக்கும் ராஜபஷக்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் திகோ குழும தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியுடன் தொடர்பில் உள்ளதாக அண்மைய நாட்களாக சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்திகளுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு, அந்த செய்திகள் பொய்யானவை என்றும், ஆதாரமற்றது என்றும் நிராகரித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் திலினி பிரியாமாலி கலந்து கொண்ட நிகழ்வில்  ஷிரந்தி ராஜபக்ஷ கலந்துகொண்ட புகைப்படம் வெளியானது, ஆனால் அது திரைப்படத் தயாரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சிக்கான வெளியீட்டு நிகழ்வில்  ராஜபக்ஷ கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறப்படுகிறது.

சிரேஷ்ட அரசியல்வாதிகள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

திலினி பிரியமாலியுடன் ஷிரந்தி ராஜபக்ஷவோ அல்லது முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தாரோ தொடர்பு கொண்டிருந்தார் என்பதை வன்மையாக மறுக்கும் முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு, தவறான நோக்கத்துடன் தொடர்புடைய படத்தைப் பரப்பும் சிலரின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கிறது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd