web log free
April 27, 2025

திலினிக்கு பக்க பலமாக இருப்பது நாமல் ராஜபக்ஷ

கொழும்பு கோட்டையில் உள்ள உலக வர்த்தக நிலையத்தின் 34வது மாடியில் அலுவலகம் நடத்தி வர்த்தகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களிடம் கோடிக்கணக்கான ரூபாவை முதலீடு செய்த திலினி பிரியமாலியின் பின்னால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதில் தேசிய அமைப்பாளர்  நாமல் ராஜபக்ஷ,  இருப்பதாக ஜேவிபி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டார்.

திலினி பிரியமாலி தொடர்பான சம்பவத்தில் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி.யின் பல முக்கியஸ்தர்களின் பெயர்கள் உள்ளிட்ட பொய்யான செய்தியை வெளியிட்டவர்கள் மற்றும் உண்மையாகவே தொடர்புடையவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு கையளிக்கப்பட்டது. 

கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் யார் என்பதை நாடு வெளிப்படுத்த வேண்டும் என்றும், கருப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஜானகி சிறிவர்தனவுக்கு அதிக பணம் வழங்கப்பட்டதாகவும், ஜானகி சிறிவர்தன நாமல் ராஜபக்சவின் தோழி எனவும் திலினி பிரியமாலி சிறையில் இருந்து வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். 

எனவே, இந்த சதி மோசடி பின்னணியில் நாமல் ராஜபக்ச இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd