கல்முனை - சாய்ந்தமருது பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற இடத்தில் இருந்து 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
6 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 6 சிறுவர்கள் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடொன்றில் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட பெண் மற்றும் சிறிய பிள்ளையொன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த பரஸ்பர துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் பாதுகாப்பு தரப்பினருக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும், பொய்யான தகவல்களை நம்பவேண்டாம் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.