சமூக வலைத்தளங்கள்மீது தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பணிப்புரை விடுத்துள்ளார்.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளருக்கு, இன்று காலை அவர் இந்த பணிப்புரையை விடுத்திருக்கின்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களை அடுத்து, பொய்ப் பிரசாரங்களையும், வதந்திகளையும் தடுப்பதற்காக இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டன.
ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவார் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.